80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிட்ட ட்ரம்ப்! ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கலக்கம்
அரசின் செலவினங்களை குறைக்க டொனால்டு ட்ரம்ப் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார்.
ட்ரம்பின் புதிய உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றத்தில் இருந்து டொனால்டு ட்ரம்ப் (Donald Trump) எடுத்து வரும் நடவடிக்கைகள் பரபரப்பையும், சில விடயங்களில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது அவரது புதிய உத்தரவு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
அதாவது, DOGE பரிந்துரையின்படி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான துறையில் 80,000 அரசு பணியிடங்களை ரத்து செய்ய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசு முடிவு செய்துள்ளது.
நிதி ஒதுக்கீட்டை குறைக்க முடிவு
அத்துடன் இந்தத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டை கணிசமாக குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் டொனால்ட் ட்ரம்ப் கையேயெழுத்திட்டதாக கூறப்படுகிறது.
புதிய உத்தரவினால் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்; பலர் வேலையை இழப்பார்கள்.
ட்ரம்பின் இந்த முடிவு குறித்து ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |