உக்ரைன் ஜனாதிபதியின் கோரிக்கையை ட்ரம்ப் நிறைவேற்றலாம்... பிரித்தானிய நிபுணர் வெளிப்படை
ரஷ்யாவை மொத்தமாக உலுக்கும் தாக்குதல் நடவடிக்கையை முன்னெடுக்க உக்ரைனுக்கு டொனால்டு ட்ரம்ப் அனுமதி அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு
ரஷ்யா மீது நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளிடம் உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
ஆனால் அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் மற்றும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, MI6 இன் முன்னாள் தலைவரான Sir Richard Dearlove முக்கியமான கருத்துகளை பதிவு செய்துள்ளார்.
அதில், ரஷ்யாவுடன் டொனால்டு ட்ரம்ப் அனுசரித்து செல்வார் என்பதெல்லாம் கட்டுக்கதை என குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைனை கைவிட்டுவிட்டு தாம் ஒரு சக்திவாய்ந்த தலைவர் என்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் அவர் விரும்ப வாய்ப்பில்லை என்றார்.
உக்ரைன் விவகாரத்தை புத்திசாலித்தனமாக முடிக்கவே ட்ரம்ப் முயற்சி மேற்கொள்வார் என குறிப்பிட்டுள்ள அவர், உக்ரைன் ஜனாதிபதி நீண்ட நாட்களாக முன்வைக்கும் கோரிக்கையை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிரடியாக முடிவெடுப்பார்
அதாவது ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் என்பதே ஜெலென்ஸ்கியின் கோரிக்கையாக உள்ளது. இதனால் ரஷ்ய படைகள் முன்னேறுவதில் இருந்து தடுக்க முடியும் என ஜெலென்ஸ்கி நம்புகிறார்.
ஆனால் விளாடிமிர் புடினுக்கும் நேட்டோவுக்கும் இடையில் மோதல் போக்கு விரிவடையும் என்ற அச்சத்தில் மேற்கத்திய நட்பு நாடுகள் அனுமதி அளிக்க தயங்கின.
இந்த விவகாரத்தில் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக முடிவெடுப்பார் என்றால், உக்ரைன் படைகளுக்கு அது சாதகமாக அமையும் என்றே Sir Richard Dearlove குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |