ஹாலிவுட்டின் சிறப்பு தூதர்களாக சில்வெஸ்டர் ஸ்டலோன் நியமனம்: டிரம்ப்பின் புதிய அறிவிப்பு
ஹாலிவுட்டின் சிறப்பு தூதர்களாக சில்வெஸ்டர் ஸ்டலோன், ஜான் வொய்ட் மற்றும் மெல் கிப்சன் ஆகியோரை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
சிறப்பு தூதர்கள் நியமனம்
அமெரிக்க ஜனாதிபதியாக இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் ஹாலிவுட் திரைத் துறையின் சிறப்பு தூதர்களாக சில்வெஸ்டர் ஸ்டலோன்(Sylvester Stallone) ஜான் வொய்ட்(Jon Voight) மற்றும் மெல் கிப்சன்(Mel Gibson) ஆகியோரை நியமித்துள்ளார்.
ஹாலிவுட்டின் பெருமையை மீட்டெடுக்கவும், சர்வதேச பார்வையாளர்களின் விருப்பதை திரும்ப பெறவும் நடிகர்கள் ஹாலிவுட்டின் சிறப்பு தூதர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
Trump has appointed Sylvester Stallone, Jon Voight and Mel Gibson as “special ambassadors” to Hollywood
— NEXTA (@nexta_tv) January 17, 2025
The US president-elect said the actors will become “special ambassadors to Hollywood” in a bid to “restore its greatness” and regain the interest of international audiences.… pic.twitter.com/g3VSULZtQ7
டிரம்ப் அப்போது விவரங்களை வெளியிடவில்லை என்றாலும், ஹாலிவுட்டின் பொற்காலத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதாக உறுதியளித்து இருந்தார்.
"Rocky" மற்றும் "Rambo" படங்கள் சில்வெஸ்டர் ஸ்டலோனின் புகழ்பெற்ற படங்களாகும், அதே போல ஜான் வொய்ட்-க்கு “Midnight Cowboy” மற்றும் “Deliverance” படங்கள், மெல் கிப்சனுக்கு “Mad Max" மற்றும் "Braveheart." ஆகிய படங்கள் புகழ் பெற்றதாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |