ஆபாசப்பட நடிகையின் வழக்கால் ட்ரம்புக்கு கிடைத்துள்ள நன்மை: வெற்றி பெறுவது உறுதி?
ஆபாசப்பட நடிகை ஒருவரும் முன்னாள் மொடல் ஒருவரும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அவரை நீதிமன்றம் முன் நிறுத்தியுள்ள நிலையில், அவர்களுடைய குற்றச்சாட்டுகளால் ட்ரம்புக்கு நன்மைதான் என்கிறார் கருத்துக் கணிப்புகள் நடத்தும் ஆய்வாளர் ஒருவர்.
ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகள்
திருமணமானபின், ஆபாசப்பட நடிகை முதலான சிலருடன் தவறான தொடர்பு வைத்திருந்தது, அதை மூடி மறைப்பதற்காக அவர்களுக்கு பணம் கொடுத்தது என, 34 குற்றச்சாட்டுகள் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்டுள்ளன.
அதற்காக, ஒரு முன்னாள் ஜனாதிபதியாக இருக்கும் நிலையிலும் ட்ரம்ப் கைது செய்யப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலக நாடுகளின் தலைவர்கள் சிலர் அதற்கு கண்டனம் தெரிவிக்க, மற்றவர்கள், தாங்கள் அரசியல் பேசுவதில்லை என அமைதியாகிவிட்டார்கள்.
குற்றச்சாட்டுகளால் ட்ரம்புக்கு நன்மைதான்
இந்நிலையில், குற்றச்சாட்டுகளால் ட்ரம்புக்கு நன்மைதான் என்கிறார் கருத்துக் கணிப்புகள் நடத்தும் ஆய்வாளரான John Zogby என்பவர்.
ட்ரம்ப், 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். கட்சியின் வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள் ட்ரம்பின் போட்டியாளரான Ron DeSantisஐ விட ட்ரம்ப் 31 புள்ளிகள் அதிகம் பெற்றுள்ளதைக் காட்டுகின்றன.
விடயம் என்னவென்றால், கடந்த வாரம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ட்ரம்ப் 14 புள்ளிகள்தான் அதிகம் பெற்றிருந்தார். அதாவது, ட்ரம்புக்கு ஆதரவு அதிகரித்துள்ளது.
அதாவது, குற்றம் சாட்டப்பட்டுள்ள ட்ரம்ப் குற்றவாளியாக பார்க்கப்படாமல், பாதிக்கப்பட்டுள்ளவராக அதாவது victimஆக முன்னிறுத்தப்படுகிறார். அதற்கு மக்களாட்சிக் கட்சியும் ஆதரவளிக்கிறது.
இந்த ஆதரவு, வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடும் என்கிறார் ஆய்வாளரான John Zogby.
ஆக, 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில், ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவது, கிட்டத்தட்ட தவிர்க்கமுடியாதது என்கிறார் அவர்.