டொனால்டு ட்ரம்பிற்கு உயரிய குடிமக்கள் விருதை வழங்கும் 2 மேற்கு ஆசிய நாடுகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், மேற்கு ஆசிய அமைதிக்காக எடுத்த முக்கிய நடவடிக்கைகளுக்காக இஸ்ரேலும் எகிப்தும் தங்களின் உயரிய குடிமக்கள் விருதுகளை வழங்க உள்ளன.
இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக், கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்த போருக்கு முடிவெடுத்ததற்கும், காசாவில் இருந்து சிறை வைக்கப்பட்டவர்களை விடுவிக்க உதவியதற்கும் டொனால்டு ட்ரம்ப் பெரும் பங்கு வகித்ததாக கூறியுள்ளார்.
"அவரது இடையறாத முயற்சிகள், நமது அன்புக்குரியவர்களை வீடு திரும்பச் செய்ததுடன், பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளன" என ஹெர்சோக் தெரிவித்துள்ளார்.
இதற்காக டொனால்டு ட்ரம்ப் இஸ்ரேலின் உயரிய குடிமக்கள் விருதான "Israeli Presidential Medal of Honour” விருதை பெறவுள்ளார்.

அதேபோல், எகிப்து ஜனாதிபதி அப்துல்-பத்தா எல்-சிசி, டொனால்டு ட்ரம்ப் மேற்கு ஆசிய அமைதிக்காக செய்த பங்களிப்பை பாராட்டி, நாட்டின் உயரிய விருதான "Order of the Nile" விருதை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்,
காசா போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் ட்ரம்ப் முக்கிய பாங்கு வகித்ததாகவும், அமைதிக்கான முயற்சிகளை ஊக்குவித்ததாகவும் எகிப்து அரசு தெரிவித்துள்ளது.
இன்று (அக்டோபர் 13) இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சிறை கைதிகள் மற்றும் பிடிபட்டவர்கள்களுக்கு இடையிலான பரிமாற்றம் தொடங்கியுள்ளது. இது ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச அமைதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump Israel civilian award, Trump Egypt Order of the Nile, Israel Presidential Medal of Honour, Gaza ceasefire 2025, Hostage release Gaza, Trump peace plan 2025, Israel Hamas prisoner exchange, Trump awarded for peace efforts