கனேடிய கார்களுக்கு 50 சதவீதம் வரி - வர்த்தகப் போரை தீவிரப்படுத்தும் டிரம்ப்
Trump imposes 50 percent tariffs on Canada from 2027: கனடாவிற்கு எதிராக வர்த்தகப் போரை டிரம்ப் தீவிரப்படுத்துகிறார்.
50 சதவீதம் வரி
அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக உறவுகள் மீண்டும் கடுமையான நிலைக்கு சென்றுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், 2027 ஜனவரி 1 முதல் கனடாவில் இருந்து வரும் கார்கள், லொரிகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

டிரம்ப் தனது Truth Social பதிவில், “அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வரி இல்லை. ஆனால் கனடா பல ஆண்டுகளாக அமெரிக்காவை ஏமாற்றி வருகிறது. இதை இனி சகிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
தற்போது அமெரிக்காவில் வாகனங்களுக்கு 25 சதவீதம் வரி, எஃகு பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது. புதிய அறிவிப்பின் மூலம் சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்புள்ள கனடிய பொருட்கள் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஹாக்கி ஸ்டிக் முதல் சிமெண்டு வரை பல பொருட்கள் இதில் அடங்கும். டிரம்ப், “கனடா அமெரிக்க விவசாயிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இரு நாடுகளுக்கிடையே 60 பில்லியன் டொலர் வர்த்தக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கனடா எங்களை விட மோசமான நாடுகளில் ஒன்று” என்று கடுமையாக விமர்சித்தார்.
மார்க் கார்னியின் பதில்
இதற்கு பதிலளித்த கனடாவின் பிரதமர் மார்க் கார்னி, “அமெரிக்கா அநியாயமான ஒப்பந்தத்தை முன்வைத்தது. அதை ஏற்க முடியாது. இது வர்த்தகப் போர். நாங்கள் தாக்கப்பட்டுள்ளோம்” என்று கூறினார்.
கனடா, அமெரிக்க எஃகு மற்றும் பால் பொருட்களுக்கு பழிவாங்கும் வகையில் புதிய வரிகளை செப்டம்பர் 8 முதல் அமுல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முடிவுகள் இரு நாடுகளுக்கிடையிலான வாணிக உறவுகளை மேலும் சிக்கலாக்கும் நிலையில், உலக பொருளாதாரத்திற்கும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |