போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு விரைவில் பதில் வேண்டும்! ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்
ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.
ஹமாஸுக்கு காலக்கெடு
காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தன்னால் முன்மொழியப்பட்ட 20 அம்ச திட்டங்கள் மீதான முடிவை ஹமாஸ் அமைப்பினர் எடுப்பதற்கான காலக்கெடுவை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
டிரம்ப் வெளியிட்ட அந்த அறிவிப்பில் ஹமாஸுக்கு 3 முதல் 4 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவுடன் உரையாற்றிய டிரம்ப், ஹமாஸ் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்தால், அங்கு நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ செய்யுங்கள் அதற்கு தன்னுடைய அரசு முழு ஆதரவும் தரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஹமாஸ் இந்த திட்டத்தை நிராகரித்தால் அது மோசமான முடிவாக இருக்கும், அதே சமயம் ஏற்றுக் கொண்டால் A+ வெற்றி என தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தில், போர் நிறுத்தம், பிணைக் கைதிகள் விடுவிப்பு மற்றும் சமாதான வாரியம் நிறுவுதல் ஆகியவை முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |