அமெரிக்காவில் விரைவு குடியுரிமை! “Trump Gold Card“ திட்டத்தை அறிமுகப்படுத்திய டிரம்ப்
டிரம்ப் தங்க அட்டை என்ற புதிய குடிவரவு நடைமுறையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தியுள்ளார்.
டிரம்ப் தங்க அட்டை(Trump Gold Card)
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதிய குடிவரவு தொடர்பான டிரம்ப் தங்க அட்டை(Trump Gold Card) திட்டத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த திட்டம் செல்வந்தர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தர வதிவிடத்தையும், குடியுரிமையையும் எளிமையான முறையில் வழங்கும் நோக்கம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அமெரிக்காவின் குடியுரிமையை பெற விரும்பும் நபர்கள், குறைந்தபட்சம் $1மில்லியன் அமெரிக்க டொலர்கள் அமெரிக்காவில் முதலீடு செய்ய தயாராக இருக்க வேண்டும்.
டிரம்ப் தங்க அட்டை திட்டம் தொடர்பாக புதன்கிழமை சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட தகவலில், தகுதியுடைய மற்றும் ஆய்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நேரடி குடியுரிமை பாதையை இது ஏற்படுத்தி தருவதாகவும், அமெரிக்காவின் சிறந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தின் மூலம் தங்கள் திறமைகளை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனங்கள்
பிப்ரவரியில் இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியான போதே பல்வேறு விமர்சனங்களை இது பெற்று வருகிறது.
பல்வேறு தரப்பினருக்கு குடிவரவு கடினமாக்கப்படும் நிலையில், செல்வந்தவர்களுக்கு மட்டும் இது மிக சுலபமான மற்றும் சாதகமான இரு-அடுக்கு(two-tiered) குடிவரவு அமைப்பை உருவாக்குகிறது என அமெரிக்காவில் உள்ள பல்வேறு ஜனநாயக சக்திகள் மற்றும் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |