வெள்ளை மாளிகைக்கு வாருங்கள்.,சீன ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வருகை தருமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
டிரம்பின் 3 நாள் சீன சுற்றுப்பயணம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 3 நாள் அரசு முறை பயணமாக சீனாவிற்கு சென்றுள்ளார்.
அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்-கை நேரில் சந்தித்து முக்கிய விவாதங்கள் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பேசிய சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்கா - சீனா இடையிலான உறவு உலகின் மிக முக்கிய இருதரப்பு உறவாக நாங்கள் நம்புகிறோம்.
இந்த உறவு சிறப்பாக செயல்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும், அந்த நம்பிக்கையை எப்போது சீர்குலைத்து விடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு அழைப்பு
இந்த சந்திப்பின் போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு செப்டம்பர் 24ம் திகதி வருகை தருமாறு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

அதில் ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களே, உங்களுடைய அற்புதமான வரவேற்புக்கு மிக்க நன்றி, செப்டம்பர் 24ம் திகதி நீங்களும், உங்களுடைய மனைவி பெங் அவர்களும் வெள்ளை மாளிகைக்கு அழைப்பதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் உங்களின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்க-சீன மக்களின் நீடித்த உறவு மற்றும் செழுமைக்காக வாழ்த்து தெரிவிக்கிறேன் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |