ஈரான் விடயத்தில் இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்த ட்ரம்பிற்கு பெரும் ஏமாற்றம்
ஈரானுடனான எண்ணெய் வர்த்தகம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆறு இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து, தடையும் விதித்துள்ளார்.
உலகின் 27 நாடுகள்
ஈரானின் எரிசக்தி வர்த்தகம் மற்றும் கப்பல் துறையை அழிப்பதே இந்தத் தடையின் நோக்கமாகும். ஆனால் இந்த விடயத்தில் ட்ரம்பின் முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
உலகின் 27 நாடுகள் ஈரானின் இந்த சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்தை ஊக்குவிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவே கூறப்படுகிறது. அதில் உலகளாவிய வல்லரசான சீனாவும் அடங்கும்.
ஈரான் மீது தடைகள் விதிக்கப்படும்போதோ அல்லது அதிகரிக்கும்போதோ, சட்டவிரோத எண்ணெய் வர்த்தகம் மேலும் அதிகரிப்பதாகவே கூறப்படுகிறது. ஈரானின் எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய ஆதரவாளர்களாக, உலகின் பல பெரிய சக்திகள் ஈரானை ஊக்குவித்து வருகின்றன.
மேலும் அவை ட்ரம்ப் அல்லது அமெரிக்கத் தடைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஜூன் 2025ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் புஜைரா, ஜெபல் அலி, சூஷன், தைகாங், கிங்டாவ் மற்றும் சாங்சோ ஆகிய 6 துறைமுகங்களில் ஈரான் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் ஈரானை தங்கள் எதிராகவே பார்க்கிறது. இருப்பினும், ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இங்குள்ள முதன்மையான இரு துறைமுகங்களில் ஈரான் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இதேப்போன்று சீனாவும் ஈரான் எண்ணெய் வர்த்தகத்தை பெருமளவு ஊக்குவித்து வருகிறது.
20 சதவீதம் குறைவான விலை
பிப்ரவரி முதல் ஜூன் 2025 வரை, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி சராசரியாக ஒரு நாளைக்கு 16.7 லட்சம் பீப்பாய்களாக இருந்தது, இது ஜனவரி 2025 எண்ணிக்கையை விட 37 சதவீதம் அதிகமாகும்.
ஈரான் பல ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தடைகளுக்கு உள்ளாகியுள்ளது, ஆனால் இந்த தடைகள் ஈரானை எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் இருந்து தடுக்கவில்லை.
2023ல், ஈரான் ஏற்றுமதி செய்த எண்ணெயில் சுமார் 90 சதவீதம் சீனாவுக்குச் சென்றது, ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி 35 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியது.
அமெரிக்கத் தடைகள் இருந்தபோதிலும் வாடிக்கையாளர்களைக் கண்டறியும் வகையில், உலக சந்தை விலையை விட 20 சதவீதம் குறைவான விலையில் ஈரான் தனது எண்ணெயை விற்கிறது.
மட்டுமின்றி, ஈரானிய எண்ணெய் சீனாவிற்கும் சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா மற்றும் மாலத்தீவுகள் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் ரகசிய கடல் பாதைகள் வழியாக செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |