ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்
ஹார்முஸ் ஜலசந்தியை விடுவிக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 48 மணிநேர கெடு விதித்துள்ளார்.
ஈரானுக்கு 48 மணிநேர கெடு
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஈரானுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அதில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அனைத்து கப்பல்களும் எந்தவொரு நிபந்தனையின்றி உடனடியாக அனுமதிக்காவிட்டால், 48 மணி நேரத்தில் அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதலை முன்னெடுக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அத்துடன் இந்த தாக்குதல்கள் ஈரானின் மின்சக்தி கட்டமைப்புகள் நிர்மூலமாக்கப்படும் என்றும் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் பக்கத்தில் டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார், சமீபத்தில் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே, டிரம்பின் இந்த ஆக்ரோஷமான மற்றொரு கருத்தும் வெளிவந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த ஈரான் தடை விதித்துள்ள நிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |