ஹமாஸ் படைகளுக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்: இனி வாய்ப்பில்லை
காஸாவில் இருந்து பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்க வேண்டும் என்று ஹமாஸ் படைகளுக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹமாஸ் படைகளும்
இஸ்ரேல் நிர்வாகம் தனது விதிமுறைகளை ஏற்றுக்கொண்டதாகவும், ஹமாஸ் படைகளும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஹமாஸ் படைகளை எச்சரித்துள்ளேன். இது எனது கடைசி எச்சரிக்கை, இனிமேல் அப்படி எதுவும் இருக்காது என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஹமாஸ் படைகளுக்கு ஒரு புதிய போர்நிறுத்த திட்டத்தை ட்ரம்ப் முன்வைத்துள்ளதாக இஸ்ரேலின் N12 செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
பேச்சுவார்த்தை நடத்தும்
ட்ரம்ப் முன்வைத்துள்ள இந்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களுக்கு ஈடாக, ஹமாஸ் படைகள் எஞ்சியுள்ள 48 பணயக்கைதிகளையும் போர் நிறுத்தத்தின் முதல் நாளிலேயே விடுவித்து, அந்தப் பகுதியில் போர் நிறுத்தத்தின் போது போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தும் என்றே N12 தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ட்ரம்ப் முன்வைத்துள்ள இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் தரப்பு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், ஆனால் விரிவான விளக்கமளிக்க மறுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |