ஈரான் மீது தாக்குதலை தொடங்கும் அமெரிக்கா? G7 மாநாட்டில் பாதியிலே வெளியேறிய டிரம்ப் - பின்னணி என்ன?

Benjamin Netanyahu Donald Trump United States of America Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Karthikraja Jun 17, 2025 05:56 AM GMT
Report

G7 மாநாட்டில் இருந்து டிரம்ப் பாதியிலே வெளியேறியுள்ள நிலையில், ஈரானை அமெரிக்கா தாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் தேதி இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது. 

ஈரான் மீது தாக்குதலை தொடங்கும் அமெரிக்கா? G7 மாநாட்டில் பாதியிலே வெளியேறிய டிரம்ப் - பின்னணி என்ன? | Trump Left G7 Us May Attack Iran Us Moves Gsc

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கு, அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்தது. 

ஈரான் மீது தாக்குதலை தொடங்கும் அமெரிக்கா? G7 மாநாட்டில் பாதியிலே வெளியேறிய டிரம்ப் - பின்னணி என்ன? | Trump Left G7 Us May Attack Iran Us Moves Gsc

அமெரிக்காவின் நிலைகள் தாக்கப்பட்டால், அமெரிக்கா தனது முழு ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.

இந்த சூழலில், நேற்று ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கா தூதரகத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.

G7 மாநாட்டில் வெளியேறிய டிரம்ப்

இதனையடுத்து ஈரான் இஸ்ரேல் போர் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், "ஈரான் நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். மனித உயிர்களின் வீண் மரணத்திற்கு ஈரான் காரணமாக மாறி வருகிறது. 

ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது. இதனை நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அனைவரும் உடனடியாக டெஹ்ரானை காலி செய்யுங்கள்" என தெரிவித்தார். 

இந்நிலையில், கனடாவில் நடைபெறும் G7 மாநாட்டில் இருந்து பாதியில் இருந்து வெளியேறிய அமெரிக்கா அதிபர் டிரம்ப், அமெரிக்கா விரைகிறார். 

trump left g7

அங்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை, வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன்(Situation) அறையில் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

அலி காமெனிக்கு குறி?

மேலும், அவர் வெளியிட்ட பதிவில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நான் ஈரான் இஸ்ரேல் போரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வாஷிங்க்டன் செல்வதாக தெரிவித்துள்ளார். பேச்சு வார்த்தைக்கு இடமில்லை. அதை விட பெரிதாக ஒன்று நடக்க உள்ளது என தெரிவித்துள்ளார். 

us refueling aircraft iran 

ஏற்கனேவே அமெரிக்கா தனது எரிபொருள் நிரப்பும் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தி வருகிறது. மேலும், தனது விமானம் தாங்கிய போர் கப்பல்களையும்(GSC) மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தியுள்ளது. 

us carrier

இதன் காரணமாக அமெரிக்கா ஈரான் மீது பெரியளவிலான வான் வழி தாக்குதலை நடத்த வாய்ப்பு உள்ளதாக ராணுவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஈரான் உச்சத்தலைவர் அலி காமெனி

ஈரானின் உச்சத்தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டால் தான் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் அலி காமெனி குறி வைக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US