டோக்கியோவில் தரையிறங்கிய ட்ரம்ப்.,அவருக்கு புதிய பிரதமர் தரப்போகும் பரிசு இதுதானா?
ஜப்பானின் புதிய பிரதமரை சந்திக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் டோக்கியோ நகரில் தரையிறங்கியுள்ளார்.
டோக்கியோவில் ட்ரம்ப்
ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே தகைச்சி (Sane Takaichi) தெரிவு செய்யப்பட்டார்.
அவருடனான சந்திப்பிற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) ஜப்பான் விரைந்தார்.
தலைநகர் டோக்கியாவில் தரையிறங்கிய ட்ரம்ப் செய்தியாளர்களிடம், "புதிய பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் அபேவின் சிறந்த கூட்டாளியாகவும், தோழியாகவும் இருந்தார். அவர் என் நண்பராகவும் இருந்தார்.
அவர்கள் மிகவும் நெருக்கமாக இருந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். தத்துவார்த்த ரீதியாக அவர்கள் நெருக்கமாக இருந்தார்கள் என்று நான் நினைக்கிறேன், இது மிகவும் நல்லது" என்றார்.

முன்னதாக, ட்ரம்பிற்கு தங்க கோல்ஃப் பந்து மற்றும் அபே பயன்படுத்திய மட்டைகளை தகைச்சி பரிசளிக்க தயாராக இருப்பதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |