அமெரிக்க ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்தில் 700 மில்லியன் டொலர் சொத்துக்களை இழந்த டிரம்ப்! வெளிச்சத்திற்கு வந்த உண்மை
அமெரிக்காவின் 45வது ஜானதிபதியாக பதவிவகித்த காலத்தில் டொனால்டு டிரம்பின் நிகர சொத்து மதிப்பு சுமார் 700 மில்லியன் டொலருக்கும் அதிகமாக சரிந்துள்ளது என புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியில் மூலம் தெரியவந்துள்ளது.
45 வது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் நிகர சொத்து மதிப்பில் முக்கால்வாசி ரியல் எஸ்டேட் வர்த்தகமாகும்.
கொரோனா தொற்றுநோயால் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது, டிரம்பின் சொத்து மதிப்பு சரிய ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
டிரம்பின் செல்வத்தை குறைத்த மற்றொரு காரணி, ஜனவரி 6ம் திகதி, ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதை எதிர்த்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவு கும்பல் நடத்திய வன்முறை ஆகும்.
அமெரிக்க நாடாளுமன்ற வன்முறையால் டிரம்ப்-புரோக்கர்கள் மற்றும் கடன் வழங்குநர்களுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதன் விளைவாக, 2016 முதல், டிரம்பின் ரியல் எஸ்டேட் சாம்ராஜியத்தின் மதிப்பு 26 சதவீதம் குறைந்து 1.7 பில்லியன் டொலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.