15% முதல் 30% வரி செலுத்த வேண்டும்! வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை
வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு மீது 15% முதல் 30% வரையிலான வரிகள் விதிக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
15% முதல் 30% வரை வரி
“அமெரிக்கா பர்ஸ்ட்” என்ற கொள்கையின் அடிப்படையில் பல்வேறு உலக நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விதித்த பரஸ்பர வரி வதிப்புகளை வெள்ளிக்கிழமை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில், அதற்கு எதிராக டிரம்ப் கூடுதலாக 10% உலகளாவிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் வாகனங்களை அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதற்கு 15% முதல் 30% வரை கடுமையான வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி நிலையங்களை வெளிநாடுகளுக்கு மாற்றுவதை குறிப்பிட்டு பேசிய டிரம்ப், உள்நாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும், அப்படி செய்யாவிட்டால் கடுமையான அபராதங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பு
வாகன உற்பத்தி நிறுவனங்களை நோக்கி, நீங்கள் உங்கள் கார்களை வெளிநாடுகளில் தயாரித்து உள்நாட்டு தொழிலாளர்களின் வேலைகளை இழக்க செய்யலாம், ஆனால் அமெரிக்க தொழிலாளர்களின் நலன்களை புறக்கணித்து வெளிநாடுகளின் உற்பத்தி செய்யப்படும் கார்கள் அமெரிக்க எல்லைக்குள் நுழையும் போது பெரிய தடைகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மற்றொரு நாட்டில் தயாரித்தால், அதற்கு 15%, 20% அல்லது 30% வரை வரி செலுத்த வேண்டியது இருக்கும் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |