ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை; பாகிஸ்தான் செல்லும் ட்ரம்ப்?
ஈரான் - அமெரிக்கா இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் டிரம்ப் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை
6 வார காலமாக நடைபெற்று வந்த ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர், தற்போது 2 வார கால தற்காலிக போர் நிறுத்ததில் உள்ளது.

பாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
நாளை போர் நிறுத்தம் முடிவுக்கு வர உள்ள நிலையில், 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கான முன்னெடுப்புகளை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது.
ஆனால், ஹார்முஸ் நீரிணைக்கு அருகே ஈரானின் கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப் போவதில்லை என ஈரான் தெரிவித்தது.

ஆனால், தற்போது பேச்சுவார்த்தை குறித்து ஈரான் பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்பந்தம் மூலம் ஈரான் தீர்வு காணாவிட்டால், ஈரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின் கட்டமைப்புகள் அழிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதேவேளையில், அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், ஈரான் போருக்கு தயார் என்றும், 2 வார போர் நிறுத்தத்தின் போது சண்டைக்கான புதிய ரகசிய வியூகங்களை ஈரான் தயார் செய்து இருப்பதாகவும் ஈரான் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் செல்லும் டிரம்ப்?
இந்த அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள உள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜேடி வான்ஸ் தற்போது வரை பாகிஸ்தானுக்கு செல்லாமல் அமெரிக்காவிலே உள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளையில், இந்த பேச்சுவார்த்தையில் ட்ரம்ப்பும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்ப் இதற்காக நேரிடையாக பாகிஸ்தானுக்கு செல்லலாம் அல்லது அமெரிக்காவில் இருந்தே காணொளி வாயிலாகவும் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஹார்மோஸ் முடக்கத்தால் கச்சா எண்ணெய் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களை உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் சூழலில், போர் முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப்பிற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |