டிரம்ப், மோடி, மெலோனி இணைந்தால ஆபத்தா? இடதுசாரிகளை மீது இத்தாலிய பிரதமர் விமர்சனம்
இடதுசாரி கொள்கைகள் கொண்ட கட்சிகளை இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
வலதுசாரி அரசியல் மாநாடு
அமெரிக்காவில் வலதுசாரி அரசியல் நடவடிக்கைகளுக்கான மாநாடு சமீபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி இடதுசாரி கட்சிகளை நேரடியாக விமர்சனம் செய்தது வைரலாகி வருகிறது.
#Italy #georgiameloni #DonaldTrump #Modi
— सिरोही की आवाज (@Sirohikiaawaz) February 23, 2025
इटली की प्रधानमंत्री जॉर्जिया मेलोनी ने फिर पढ़े मोदी के शान में कसीदे और विपक्ष (वामपंथ) को चौंका दिया,
उन्होंने कहा -- "जब डोनाल्ड ट्रम्प, मेलोनी, नरेंद्र मोदी बात करते हैं, तो यह लोकतंत्र के लिए ख़तरा है"
"लेकिन जब बिल क्लिंटन और… pic.twitter.com/UnvEbhIg5F

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து
இடதுசாரிகளின் பதற்றம்
மாநாட்டில், இடதுசாரிகள் தற்போது மிகவும் பதட்டமாக இருப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வெற்றியால் அவர்கள் மிகவும் எரிச்சல் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர்களின் இந்த பதட்டத்திற்கு வலதுசாரிகளின் வெற்றிகள் மட்டும் காரணம் இல்லை, வலதுசாரிகள் உலகளவில் இணைவதும் தான் காரணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 90-களில் பில் கிளிண்டனும், டோனி பிளேயரும் இணைந்து உலகளாவிய இடதுசாரி கூட்டணியை உருவாக்கிய போது அவர்கள் மதிப்பிற்குரிய அரசியல் தலைவர்களாக பார்க்கப்பட்டனர்.
ஆனால் இன்று டிரம்ப், மெலோனி, மோடி இணையும் போது அது ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று கூறுகிறார்கள். இது தான் இடதுசாரிகளின் இரட்டை நிலைப்பாடு, ஆனால் நாம் இதற்கு பழகிவிட்டோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் நல்ல செய்தி என்னவென்றால், மக்கள் இனி அவர்களின் பொய்கலை நம்ப போவது இல்லை, அவர்கள் நம் மீது வைக்கும் விமர்சனங்களை தாண்டி மக்கள் நமக்கு வாக்களித்து கொண்டே இருக்கிறார்கள்.
இடதுசாரிகள் நினைப்பது போல் மக்கள் ஒன்றும் அறியாதவர்கள் இல்லை என்றும் மாநாட்டில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |