டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து
அமைதி பேச்சுவார்த்தையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெளிவான வெற்றி பெற்றிருப்பதாக அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கருத்து தெரிவித்துள்ளார்.
முடிவு எட்டப்படாத பேச்சுவார்த்தை
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இருவரும் நேற்று அலாஸ்காவில் சந்திப்பு நடத்தினர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படாமல் சந்திப்பு நிறைவு பெற்றது.
புடின் வெற்றி பெற்று விட்டார்!
இந்நிலையில் முன்னாள் அமெரிக்க தேசிய ஆலோசகர் ஜான் போல்டன், பேச்சுவார்த்தையில் டிரம்ப் தோல்வி அடையவில்லை என்றாலும், புடின் தெளிவான வெற்றியை பெற்றுள்ளார் என கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கான மற்றொரு சந்திப்பை உறுதிப்படுத்த முடிந்த டிரம்பால் தீர்க்கமான வெற்றியை அடைய முடியவில்லை எனவும், புதிய பொருளாதார தடைகளில் இருந்து புடின் தப்பித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் ஏமாற்றமடையவில்லை என்றாலும், டிரம்ப் மிகவும் சோர்வாக இருந்ததாகவும் போல்டன் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |