ட்ரம்பின் உயிருக்கு அச்சுறுத்தல்... ரஷ்ய ஜனாதிபதி புடினின் நடுங்கவைக்கும் எச்சரிக்கை
அனுபவம் மற்றும் அறிவார்ந்த அரசியல்வாதி என டொனால்டு ட்ரம்பை புகழ்ந்துள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஆனால் அவர் பாதுகாப்பாக இல்லை என அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பாதுகாப்பாக இல்லை
கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தேர்தல் பரப்புரையின் போது நடத்தப்பட்ட தாக்குதலில் டொனால்டு ட்ரம்ப் காயங்களுடன் தப்பினார். இந்த நிலையில், செப்டம்பர் மாதம் புளோரிடா மாகாணத்தில் மீண்டும் ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது படுகொலை முயற்சி வழக்கு பதியப்பட்டது. கஜகஸ்தான் நாட்டில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் பேசிய விளாடிமிர் புடின்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பரப்புரையின் போது நடந்தவை தமக்கு பெரும் அதிர்ச்சியை அளித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ட்ரம்பிற்கு எதிராக முற்றிலும் நாகரீகமற்ற முறைகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள புடின், என் கருத்துப்படி, அவர் தற்போதும் பாதுகாப்பாக இல்லை என்றார்.
ரஷ்யா எப்போதும் தயார்
மேலும், துரதிர்ஷ்டவசமாக, அமெரிக்காவின் வரலாற்றில் மோசமான பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. டொனால்டு ட்ரம்ப் புத்திசாலி என்று நான் நினைக்கிறேன், அவர் இதைப் புரிந்துகொண்டு எச்சரிக்கையாக இருப்பார் என்றும் நம்புகிறேன் என புடின் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தின் போது ட்ரம்பின் குடும்பம் மற்றும் குழந்தைகளை அரசியல் எதிரிகள் எப்படி விமர்சித்தனர் என்பது தம்மை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது என புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தொடர்பில் டொனால்டு ட்ரம்பின் நிர்வாகம் உரிய முடிவெடுக்கும் என தாம் நம்புவதாகவும், அமெரிக்காவுடன் விரிவான ஒரு பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா எப்போதும் தயாராக உள்ளது என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |