ரஷ்யா அருகே இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நகர்த்த உத்தரவிட்ட ட்ரம்ப்
ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி மெத்வெதேவின் முட்டாள்தனமான மற்றும் எரிச்சலூட்டும் அறிக்கையை அடுத்து, ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நகர்த்த ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
அணு ஆயுதத் தாக்குதல்
ரஷ்ய முன்னாள் ஜனாதிபதி டிமித்ரி மெத்வெதேவின் மிரட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யாவிற்கு அருகிலுள்ள பகுதிகளில் இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த உத்தரவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சோவியத் சகாப்த அணு ஆயுதத் தாக்குதல் திறன்களை ரஷ்யா கொண்டிருந்தது என்பதை ட்ரம்ப் நினைவில் கொள்ள வேண்டும் என டிமித்ரி மெத்வெதேவ் பகிரங்க மிரட்டல் விடுத்திருந்தார்.
உக்ரைனில் போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொள்ள இன்று முதல் 10 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று ட்ரம்ப் செவ்வாயன்று கூறியிருந்தார். இல்லையெனில் அதன் எண்ணெய் வாங்குபவர்களுடன் சேர்ந்து கடுமையான வரிகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
எதிர்பாராத விளைவு
ஆனால் ட்ரம்பின் இந்த மிரட்டலுக்கு ரஷ்யா பதிலளிக்க மறுத்தது. இந்த நிலையிலேயே ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விளையாட்டில் ஈடுபடுவதாக மெத்வெதேவ் குற்றம் சாட்டினார்.
அத்துடன் சோவியத் சகாப்த அணு ஆயுதத் தாக்குதல் திறன்களை ரஷ்யா கொண்டிருந்தது என்பதை ட்ரம்பிற்கு நினைவூட்டுவதாக மெத்வெதேவ் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை, மேலும் அவை பெரும்பாலும் எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும், இது அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றாக இருக்காது என்று நம்புகிறேன். இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |