உக்ரைனுக்கு 3,350 ERAM ஏவுகணைகள் வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், உக்ரைனுக்கு 3,350 ERAM ஏவுகணைகளை விற்பனை செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்கு எதிராக போராடி வரும் நிலையில், இந்த ஒப்புதல் உக்ரைனின் பாதுகாப்பு திறனை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ஒப்புதல் பெற்ற ஏவுகணைகள் விற்பனை மதிப்பு 825 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.
இந்த ஏவுகணைகள் 150 முதல் 280 மைல்கள் வரை தாக்கும் திறன் கொண்டவை.

இந்த ஏவுகணைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் உக்ரைனுக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ட்ரம்ப் நிர்வாகம் இதற்கு முன் உக்ரைனுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ஆயுதங்களை பராமரிக்க தேவையான உபகரணங்களை வழங்கி வந்தது.
ஆனால், இது புதிய வகை ஆயுதங்களை வழங்கும் முதல் பாரிய ஒப்புதல் என கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை, உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரின் நிலையை மேலும் தீவிரப்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக பலர் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump Ukraine missile deal, ERAM missile sale 2025, US arms export Ukraine, US Ukraine defense deal, Extended Range Attack Munitions, Ukraine Russia war weapons, Trump administration arms approval, US military aid Ukraine