சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை
ஈரானில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் சவப்பெட்டி இருப்பது போன்ற விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெஹ்ரானில் வைக்கப்பட்ட விளம்பரப் பதாகை
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் நீர்த்துப் போனதை அடுத்து ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் “ரத்தத்திற்கு ரத்தம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்று வைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பர பதாகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, அவர்களது பிள்ளைகளான இவான்கா, டொனால்ட் டிரம்ப் ஜூனியர், எரிக், டிஃப்பனி மற்றும் பாரோன் ஆகியோரின் புகைப்படங்கள் சவப்பெட்டியின் மீது வைக்கப்பட்டது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தெஹ்ரானில் அமைக்கப்படும் மிகப்பெரிய சுவரோவியங்கள் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினரின் ஓவ்ஜ் கலை மற்றும் ஊடக அமைப்பினால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
இந்த விளம்பர பலகை சர்வதேச அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஈரான் தன்னை கொலை செய்ய சதி செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Iran has installed a billboard in the capital Tehran showing US President Donald Trump lying in a coffin.
— Al Jazeera Breaking News (@AJENews) July 15, 2026
A statue nearby depicts the fist of late Supreme Leader Ayatollah Ali Khamenei, who was assassinated at the start of the US-Israeli war on Iran. pic.twitter.com/ILvE0RAXrF
மேலும் இதற்கு முன்னதாக தெஹ்ரானில் ஏங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்ட மற்றொரு விளம்பர பலகையில் டிரம்பை நாங்கள் கொல்லுவோம் என்று பாரசீக மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அத்துடன் அதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திறந்த கருப்பு நிற சவப்பெட்டியில் படுத்து இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |