டிரம்ப் மட்டும் தான் சொல்கிறார்! இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வியாபாரம் குறித்து ரஷ்யா விளக்கம்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டும் தான் கூறி வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் அறிவிப்பு மற்றும் வரி குறைப்பு நடவடிக்கை
கடந்த வாரம் இந்திய பிரதமர் மோடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலை தொடர்ந்து, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாக தன்னுடைய சமூக ஊடகம் வழியாக தெரிவித்தார்.

அத்துடன் இதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பை 25% சதவீதத்தில் இருந்து 18% சதவீதமாக குறைத்து அறிவித்தார்.
மேலும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25% சதவீத வரிவிதிப்பையும் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்து அறிவித்தார்.
அதே சமயம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொள்வது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இந்தியா இதுவரை வெளியிடவில்லை.
ரஷ்யா விளக்கம்

இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டும் தான் கூறி வருவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த செர்ஜி லாவ்ரோவ், இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து டிரம்ப் தெரிவித்ததாக கூறுகிறீர்கள், ஆனால் இது குறித்து இந்திய பிரதமர் மோடியோ அல்லது இந்தியாவின் முக்கிய தலைவர்களோ இது குறித்து பதிலளித்து அல்லது அறிக்கை வெளியிட்டு நான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |