தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை:ஹார்முஸ் வழியாக பயணிக்கும் கப்பல்களை இடைமறிக்க டிரம்ப் உத்தரவு
ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களை முற்றுகையிட போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
கப்பல்களை இடைமறிக்க டிரம்ப் உத்தரவு
ஈரானுக்கு கட்டணம் செலுத்தி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணம் செய்யும் அனைத்து கப்பல்களையும் இடைமறிக்க அமெரிக்க படைகளுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், உலகின் முதன்மையான கடல்வழித் தளமான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவும் நேரடி மோதல் அதிகரித்துள்ளது.

சர்வதேச கடற்பரப்பில் ஈரானுக்கு கட்டணம் செலுத்தும் ஒவ்வொரு கப்பலும் இடைமறிக்க அமெரிக்க படைகளுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த ஈரான் மறைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளை அமெரிக்க ராணுவம் அகற்றும் என்றும் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் விடுத்த கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சமூக வலைதளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில் கருத்தை வெளியிட்டுள்ள டிரம்ப், ஈரான் அத்துமீறல் எதிலும் ஈடுபட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா முழுமையாக தயாராக இருப்பதாகவும், அமெரிக்க படைகளோ, அல்லது மற்ற வணிக கப்பல்களோ ஈரானால் தாக்கப்பட்டால் அவர்கள் நரகத்திற்கு அனுப்பப்படுவார்கள் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அத்துடன் ஈரானின் அழிக்கப்படாத எஞ்சிய பகுதிகளையும் அமெரிக்க ராணுவம் அழித்து முடிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து விவகாரங்களில் ஏற்பட்ட தோல்வியே பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிய காரணம் என பார்க்கப்படுகிறது.
ஈரான் அணுசக்தி கனவுகளை கைவிட தயாராக இல்லை என்றும், ஈரானை அணு ஆயுதம் ஏந்த எப்போது அமெரிக்கா அனுமதிக்காது என்றும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |