33 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கா அணு ஆயுத சோதனை - டிரம்ப் உத்தரவுக்கு காரணம் என்ன?
அணு ஆயுத சோதனையை மேற்கொள்ள அமெரிக்கா போர் துறைக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
சீன அதிபரை சந்திக்கும் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப், உலக நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார்.

இதன்படி, சீனாவிற்கும் வரி விதிக்க, சீனாவும் பதிலுக்கு அமெரிக்கா பொருட்களுக்கு கூடுதல் வரி விடுத்தது. இப்படியாக இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக போர் நடைபெற்றது.
இந்நிலையில், சீனாவுடன் வரி மற்றும் அறிய கனிமங்கள் குறித்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்க தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துள்ளார்.
அமெரிக்கா அணு ஆயுத சோதனை
இந்த சந்திப்பிற்கு முன்னதாக அணு ஆயுத சோதனை நடத்துமாறு அமெரிக்கா போர் துறைக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது Truth Social பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கா உலகின் மற்ற நாடுகளை விட அதிக அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடு ஆகும். என்னுடைய முதல் பதவிக்காலத்தில் அணுஆயுதங்களை புதுப்பித்ததால் இது சாத்தியமானது.
அணு ஆயுத எண்ணிக்கையின் அடிப்படையில் ரஷ்யா 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும் உள்ளது. ஆனால் இன்னும் 5 ஆண்டுகளில் சீனா சீனாவிடமும் சமமான அணு ஆயுதங்கள் இருக்கும்.
இந்த எண்ணிக்கையை சமன் செய்ய அமெரிக்கா போர் துறைக்கு அணு ஆயுதங்களை சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன். இந்த செயல்முறை உடனடியாக தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கடைசியாக 1992 ஆம் ஆண்டில் George H. W. Bush ஜனாதிபதியாக இருந்த போது அணு ஆயுத சோதனை நடத்தியது.
தற்போது 33 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |