பெண் நெறியாளர் கேட்ட அந்த கேள்வி: மைக்கை வீசிவிட்டு கிளம்பிய ட்ரம்ப்..வைரல் வீடியோ
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தவறான தேர்தல் கூற்றுக்கள் குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோது, நேர்காணலில் இருந்து வெளியேறிய வீடியோ வைரலானது.
தேர்தல் முறைகேடு
கடந்த வாரம் Wisconsin பயணத்தின்போது, அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியான 'Meet the Press'-யில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சி பகுதி ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்டது.
Trump has a meltdown and ends the interview
— Acyn (@Acyn) June 7, 2026
Welker: Just to be very clear, there's no evidence of what you're saying.
Trump: There’s a lot of evidence. There’s tremendous evidence. There’s nothing but evidence. The election was rigged. And it’s happening again in California.… pic.twitter.com/8xcPKFGE6m
அதில், கலிபோர்னியாவில் தேர்தல் முறைகேடு நடந்ததாக கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்குமாறு செய்தி வாசிப்பாளர் ட்ரம்ப்பிடம் கேட்கிறார்.
அதற்கு ட்ரம்ப், "நான் சற்று உற்றுப் பார்த்தாலே போதும்" என்று பதிலளித்ததோடு, தான் மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்ப்பதாகவும் கூறினார்.
மைக்ரோபோனை கழற்றிய ட்ரம்ப்
ஆனால், "எந்த ஆதாரமும் இல்லை" என்று சுட்டிக்காட்டி நிருபர் மீண்டும் வலியுறுத்திக் கேட்டார். அதற்கு ட்ரம்ப் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை.
அதே சமயம், தேர்தல் நாள் முடிந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருப்பது முறையானதா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறாக இருவருக்குள்ளும் வாக்குவாதம் தொடர, "மன்னிக்கவும், இதோடு முடித்துக்கொள்வோம், ஏனென்றால் எனக்குப் போதுமானதாகிவிட்டது. நன்றி" என்று கூறிய ட்ரம்ப், தனது மைக்ரோபோனை கழற்றி தரையில் வீசிவிட்டு வெளியேறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |