டொனால்டு ட்ரம்பால் பேரிழப்பை எதிர்கொள்ளும் எலோன் மஸ்க்... இதுவரை பல ஆயிரம் கோடிகள்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் வர்த்தகப் போர் காரணமாக தலைகீழாக மாறிய சந்தை நிலவரத்தால், எலோன் மஸ்க் உட்பட உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் சிலர் பேரிழப்பை எதிர்கொண்டு வருகின்றனர்.
160 பில்லியன் பவுண்டுகள்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பொறுப்புக்கு வந்ததில் இருந்து, அவரது அதிரடி நடவடிக்கைகளால் சுமார் 160 பில்லியன் பவுண்டுகள் தொகையை ட்ரம்புக்கு நெருக்கமான பெரும் கோடீஸ்வரர்கள் இழந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றதும் பங்குச்சந்தை எதிர்பாராத ஏற்றம் கண்டது. அமெரிக்கா இனி வளர்ச்சி பாதையில் அதிரடியாக முன்னேறும் என்ற நம்பிக்கை உருவானது.
மட்டுமின்றி, ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவன ஜாம்பவான்களின் பங்கேற்பும் இந்த உற்சாகமான மனநிலையை அடிக்கோடிட்டுக் காட்டியது.
ஆனால் தற்போது எலோன் மஸ்க் உட்பட்ட அந்த பெரும் கோடீஸ்வரர்கள் மட்டுமின்றி, பிரான்சின் Bernard Arnault உம் ட்ரம்பால் கடும் பொருளாதார சரிவை எதிர்கொள்கிறார்.
ஜனவரி 20ம் திகதிக்கு பின்னர் ட்ரம்பின் மிக நெருக்கமான கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மட்டும் 115 பில்லியன் பவுண்டுகள் தொகையை இழந்துள்ளார். அவரது டெஸ்லா நிறுவனம் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
பேரிடியாக மாறியுள்ளது
டெஸ்லா பங்குகளின் மதிப்பு சரிபாதி சரிவடைந்துள்ளது. டெஸ்லா கார்களை வாங்க மக்கள் விரும்பவில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், பங்குகளின் விலைகள் சரிவதால், அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை உருவாகலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
ட்ரம்பின் வருகை, பொருளாதார வளர்ச்சியை கொண்டுவரும் என நம்பியிருந்தவர்களுக்கு பேரிடியாக மாறியுள்ளது என்றே நிபுணர்கள் தரப்பின் கருத்தாக உள்ளது.
ஜனவரி 20ம் திகதிக்கு பின்னர் டெஸ்லாவின் எலோன் மஸ்க், அமேசானின் ஜெஃப் பெசோஸ், கூகிள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், மற்றும் பேஸ்புக் உரிமையாளர் மெட்டாவின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் உட்பட ஐவர் இதுவரை 162 பில்லியன் பவுண்டுகளை இழந்துள்ளனர்.
ட்ரம்பால் தற்போது பேரிழப்பை எதிர்கொண்டு வருபவர் எலோன் மஸ்க் என்றே கூறப்படுகிறது. இதனாலையே அவருக்கு ஆதரவளிக்கும் பொருட்டு, டெஸ்லா கார் ஒன்றை வாங்கி டொனால்டு ட்ரம்ப் ஊக்கமளிக்க முயன்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |