ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
ஈரான் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஈரான் மீதான தாக்குதலை ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்காவும் ஈரானும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழலுக்கு தீர்வு காண்பது தொடர்பில், நல்ல, பலனளிக்கக்கூடியவகையிலான பேச்சுவார்த்தைகளை நடத்தின.

இந்நிலையில், பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் முழுவதும் தொடர இருக்கின்றன. ஆகவே, ஈரான் எரிசக்தி அமைப்புகள் மற்றும் ஆற்றல் கட்டமைப்பு மீதான அனைத்து ராணுவ தாக்குதல்களையும் ஐந்து நாட்களுக்கு நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |