இரண்டு வார போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்

Donald Trump Iran Strait of Hormuz
By Ragavan Apr 08, 2026 12:04 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரம் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

"இன்று இரவு ஒரு முழு நாகரீகமும் அழியப்போகிறது" என ஈரானுக்கு எதிராக கடுமையான அச்சுறுத்தலை விடுத்திருந்த நிலையில், காலக்கெடுவிற்கு கடைசி இரண்டு மணிநேரங்களுக்கு முன் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஹார்முஸ் விவகாரம்: ஐ.நா.வில் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யா எதிர்ப்பு

ஹார்முஸ் விவகாரம்: ஐ.நா.வில் முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு சீனா, ரஷ்யா எதிர்ப்பு

மேலும், இந்த அறிவிப்பானது ஒரு நிபந்தனையுடன் வந்துள்ளது.

இந்த இரண்டு வார போர் நிறுத்தம் என்பது, ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை முழுமையாக, உடனடியாக மற்றும் பாதுகாப்பாக திறப்பதற்கு ஒப்புக்கொள்வதற்கு உட்பட்டது என தெரிவித்துள்ளார்.

Trump Iran ceasefire, Hormuz Strait reopening, US Iran peace talks, Pakistan mediation Iran US, Middle East oil trade, Trump Truth Social Iran #Trump #Iran #Hormuz #Ceasefire #MiddleEast #OilTrade #USPolitics #WorldNews

இதன் மூலம் ஈரான் இன்னும் உத்தியோகபூர்வமாக ஹார்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.

ட்ரம்ப் தனது Truth Social பதிவில், பாகிஸ்தான் முன்வைத்த இரண்டு வார போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொண்டதாகவும், இந்த காலத்தில் இறுதி அமைதி ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“எங்கள் இராணுவ இலக்குகள் நிறைவேறிவிட்டன. இப்போது நீண்டகால அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.” என்று அவர் கூறியுள்ளார்.

ஈரான் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, “அமெரிக்க தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்கள் ஆயுதப்படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும். இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் வழியாக பாதுகாப்பான கடற்பயணம் சாத்தியம்” என்று அறிவித்தார்.

மின்நிலையங்கள், பாலங்களை காக்க மனித சங்கிலிகளாக உருவெடுத்த ஈரானியர்கள்

மின்நிலையங்கள், பாலங்களை காக்க மனித சங்கிலிகளாக உருவெடுத்த ஈரானியர்கள்

இந்த முடிவுக்கு சீனாவின் தலையீடு முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் புதிய உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி, பாகிஸ்தான் முன்மொழிந்த போர்நிறுத்ததை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

போர் தொடங்கிய நாள் (பிப்ரவரி 28) முதல், இதுவரை ஈரானில் 1,900 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் மோதலில் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 23 பேர், அமெரிக்காவில் 13 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு வார போர்நிறுத்தம், மத்திய கிழக்கு அமைதிக்கான முக்கிய வாய்ப்பாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#Trump #Iran #Hormuz #Ceasefire #MiddleEast #OilTrade #USPolitics #WorldNews 
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US