மேக்ரான் மனைவி தொடர்பில் ஊடகவியலாளரை தொலைபேசியில் அழைத்து பேசிய ட்ரம்ப்
பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் குறித்து அவ்வப்போது இணையத்தில் வதந்திகள் பரவுவதுண்டு.
இந்நிலையில், அப்படி பிரிஜிட்டைக் குறித்து வதந்தி பரப்பும் ஒரு பெண்ணை, அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசியதைக் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகவியலாளரை தொலைபேசியில் அழைத்து பேசிய ட்ரம்ப்
கேண்டேஸ் (Candace Owens) என்னும் அமெரிக்கப் பெண், ஒரு தொலைக்காட்சி பிரபலம் மற்றும் அரசியல் விமர்சகரும் ஆவார்.
இந்த கேண்டேஸ், மேக்ரானின் மனைவியான பிரிஜிட் மேக்ரானை கேலி பேசுவதையே வழக்கமாகக் கொண்டவர்.
குறிப்பாக, பிரிஜிட் பெண் அல்ல, அவர் ஆணாகப் பிறந்தவர் என கேண்டேஸ் கூறுவதுண்டு.
இந்நிலையில், தற்போது, ட்ரம்ப் தன்னை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்தது குறித்து பேசியுள்ளார் கேண்டேஸ்.
பிப்ரவரி மாதம், மேக்ரான் வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்த நிலையில், அவர் புறப்பட்ட சிறிது நேரத்தில் தனக்கு ஒரு செய்தி வந்ததாக தெரிவிக்கிறார் கேண்டேஸ். உங்கள் தொலைபேசியை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு அழைப்பு வரும் என்று கூறியுள்ளது அந்த செய்தி. அந்த செய்தியால் தான் வியப்பில் ஆழ்ந்திருக்க, சிறிது நேரத்தில் தன்னை அழைத்த ட்ரம்ப், மேக்ரானின் மனைவி பிரிஜிட்டைக் குறித்து விமர்சிப்பதை நிறுத்துமாறு தன்னிடன் கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார் கேண்டேஸ்.
ட்ரம்பே தன்னை அழைத்து பிரிஜிட்டைக் குறித்து பேசுவதை நிறுத்துமாறு கூறியதை தன்னால் நம்பமுடியவில்லை என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |