ஹார்முஸை திறந்தால்., ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் திட்டம்

Donald Trump Iran Strait of Hormuz Iran-US Conflict
By Thiru Aug 09, 2026 11:43 PM GMT
Report

ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் ஈரான் உடனான புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிரம்பின் புதிய திட்டம்

வணிக கப்பலின் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் ஈரான் திறந்து விட்டால் ஈரானிடம் பெற திட்டமிட்டு இருந்த புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக The Wall Street Journal செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஹார்முஸை திறந்தால்., ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் திட்டம் | Trump Plan To Quit Nuclear Stand With Iran

அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக, சர்வதேச அளவில் முக்கியமான நீர்வழி வணிக பாதையான ஹார்முஸை எந்தவொரு தடையும் இன்றி மீண்டும் திறந்து விடுவதற்காக பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ முற்றுகையை கைவிடவும், தற்போதுள்ள போர் நிறுத்தத்தை தொடரவும் டிரம்ப் அரசு ஒப்புக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கிராமங்களை சூறையாடிய உக்ரைன்: சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்: 6 பேர் பலி

ரஷ்ய கிராமங்களை சூறையாடிய உக்ரைன்: சுட்டு வீழ்த்தப்பட்ட 285 ட்ரோன்கள்: 6 பேர் பலி

கடந்த சில வாரங்களாக இதற்கான சூழலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உருவாக்கி வருவதாகவும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை பெற முடியாவிட்டாலும், போர் நடவடிக்கைகளில் இருந்து விலகிச் செல்லலாம் என்று தன்னுடைய மூத்த ஆலோசகர்களுடன் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ஹார்முஸ் நீரிணையை திறப்பது குறித்து ஈரான் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக கூறப்படுகிறது.

ஈரானின் நிபந்தனைகள்

ஹார்முஸை திறந்தால்., ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் திட்டம் | Trump Plan To Quit Nuclear Stand With Iran

போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கல், அமெரிக்க கடற்படை முற்றுகையை திரும்ப பெறுதல், பொருளாதார தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகியவற்றை ஈரான் கோருவதாக கூறப்படுகிறது.

இந்த கோரிக்கைகளின் காரணமாக அமெரிக்காவின் ராஜதந்திர முடிவுகளில் தெளிவு குறைந்து இருப்பதாகவும், ஈரான் நீண்ட கால மோதலுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது என்று The Wall Street Journal தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US