அரசியலமைப்பை திருத்த திட்டமிட்டுள்ள ட்ரம்ப்: எச்சரிக்கும் ஜேர்மன் தூதர்
பொறுப்புக்கு வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க சட்ட அமலாக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் என்று அமெரிக்காவிற்கான ஜேர்மனியின் தூதர் எச்சரித்துள்ளார்.
அதிகபட்ச இடையூறு
அத்துடன், ஊடகங்கள் தங்கள் சுதந்திரத்தையும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இணை நிர்வாக அதிகாரத்தையும் ட்ரம்ப் நிர்வாகம் வழங்கும் என ரகசிய ஆவணம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி 14ல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆவணத்தில் தூதர் ஆண்ட்ரியாஸ் மைக்கேலிஸ் கையெழுத்திட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடுகையில், டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான திட்டம் என்பது அதிகபட்ச இடையூறுகளை ஏற்படுத்துவது.
மட்டுமின்றி, தங்களுக்கு சாதகமாக அரசியலமைப்பை திருத்தம் செய்வதேயாகும் என்றார். அதனூடாக காங்கிரஸ் மற்றும் பெடரல் மாகாணங்களை பலவீனப்படுத்தி ஜனாதிபதியிடம் அதிகபட்ச அதிகாரக் குவிப்பு ஒன்றே அவர்களின் இலக்கு.
தண்டனையிலிருந்து விலக்கு
அடிப்படை ஜனநாயகக் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மற்றும் சமநிலைகள் பெருமளவில் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படும். மட்டுமின்றி, சட்டமன்றம், சட்ட அமலாக்கம் மற்றும் ஊடகங்கள் அவற்றின் சுதந்திரத்தைப் பறித்து, அரசியல் பிரிவினை தவறாகப் பயன்படுத்தப்படும், பெரும் தொழில்நுட்ப முதலாளிகளுக்கு கூட்டு நிர்வாக அதிகாரம் வழங்கப்படும் என அந்த ரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ட்ரம்ப் தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நீதித்துறை மற்றும் FBI மீதான கட்டுப்பாடு முக்கியமாகும், இதில் பெருமளவிலான நாடுகடத்தல்கள், எதிரிகளாகக் கருதப்படுபவர்களுக்கு எதிராக பழிவாங்குதல் மற்றும் சட்டப்பூர்வ தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுதல் ஆகியவை அடங்கும் என்றே மைக்கேலிஸ் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |