இந்தியா, சீனா மீது 500 சதவீத வரி., ரஷ்யாவை முடக்க ட்ரம்ப் புதிய திட்டம்
ரஷ்யாவை முடக்க இந்தியா, சீனா மீது 500 சதவீதம் வரி விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளின் மீது 500 சதவீத இறக்குமதி வரி (Tariff) விதிக்க புதிய சட்டத்தை ஆதரித்துள்ளார்.
இந்த முன்மொழிவை ரிபப்ளிகன் செனட்டர் லின்ஸி கிரஹாம் (Lindsey Graham) மற்றும் டெமோக்ராட் செனட்டர் ரிச்சர்ட் புளுமேந்தால் (Richard Blumenthal) இணைந்து கொண்டு வந்துள்ளனர்.
இந்த சட்டம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் வழியாக இது கருதப்படுகிறது.
இந்தியா மற்றும் சீனா ஆகியவை ரஷ்யாவின் மிகப்பாரிய எண்ணெய் வாங்குநர்களாக உள்ளதால், இந்த சட்டம் இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவைச் சேர்ந்த பரிசோதனை மருந்துகள், ஆடைத் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் கார்கள் போன்ற பல தயாரிப்புகள் இப்போது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் வரி அதிகரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இந்திய அரசாங்கம் இதுவரை சட்டப்பூர்வமான வர்த்தக நிபந்தனைகளுக்கு உட்பட்டு எண்ணெய் வாங்குவதாகவும், இது எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கியம் என்பதையும் வலியுறுத்தி வருகிறது.
ஆனால் இந்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டால், அமெரிக்காவுடன் இந்தியாவின் வர்த்தக உறவில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump India tariff, US sanctions India Russia oil, India US trade war 2025, Lindsey Graham 500 percent tariff bill, Trump Senate Russia bill, India Russia crude oil imports, US tariff threat on India, Trump news India impact, US-India relations 2025, Tariff bill Trump approval