ஒரு பில்லியன் டொலர் நிதியை முடக்க திட்டம்: பகையை வளர்க்கும் ட்ரம்ப்..மற்றொரு அடி
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கான நிதியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முடக்க திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
2.2 பில்லியனுக்கும் அதிகமான நிதி
பிரபல பல்கலைக்கழகமான ஹார்வர்டில் யூத எதிர்ப்புக்கு எதிராக போராட உதவும் வகையில், அதன் பணியமர்த்தல், சேர்க்கை மற்றும் கற்பித்தல் நடைமுறைகளை சீர்திருத்த அரசாங்கத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்திற்கு 2.2 பில்லியனுக்கும் அதிகமான நிதியை வெள்ளை மாளிகை முடக்கியது.
அத்துடன் பல ஆண்டு ஒப்பந்த மதிப்பில் 60 மில்லியன் டொலர்களையும் முடக்குவதாக அறிவிக்கப்பட்டது.
நிதி இப்போது ஆபத்தில் உள்ளது
இந்த நிலையில் ஹார்வர்டில் இருந்து மற்றொரு பில்லியன் டொலர் நிதியை ஈர்க்க டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) திட்டமிட்டுள்ளார்.
சுகாதார ஆராய்ச்சிக்காக பல்கலைக்கழக நிதியில் இருந்து கூடுதலாக 1 பில்லியனை எடுக்க ட்ரம்ப் நடவடிக்கை எடுப்பதன் மூலம், அவர் பகையை அதிகரித்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஊடகத்திடம் கூறியுள்ளன.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஹார்வர்டின் நிதி இப்போது ஆபத்தில் உள்ளது என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |