டிரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வரைபடம்: அமெரிக்க தூதரை அழைத்து கண்டித்த ஐஸ்லாந்து
Trump Post a Controversial Map include Iceland: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய புகைப்படத்திற்கு ஐஸ்லாந்து கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கொடியால் மூடப்பட்ட வரைபடம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
டிரம்ப் வெளியிட்ட அந்த வரைபடத்தில் கனடா, கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, மெக்சிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் ஆகிய பகுதிகள் அமெரிக்க கொடியால் போர்த்தப்பட்டு இருப்பது போன்று சித்தரிக்கப்பட்டிருந்தது.
🚨 LMFAO! Iceland has reportedly summoned the US Ambassador after Donald Trump posted a map of the United States laying claim to the entire continent of North America — and Iceland
— Eric Daugherty (@EricLDaugh) September 8, 2026
Are they fearing an invasion 😂
Trump is a master troll. There is nobody else like him. pic.twitter.com/pLGI7RRep9
மேலும் அதில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் என பெயரிடப்பட்டிருந்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐஸ்லாந்து கண்டனம்
இந்நிலையில், டிரம்ப் வெளியிட்ட வரைபடம் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அத்துடன் ஐஸ்லாந்திற்கான அமெரிக்க தூதரை நேரில் அழைத்து ஐஸ்லாந்து வெளியுறவு அமைச்சகம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - டென்மார்க் இடையிலான இராஜதந்திர பதற்றம்

ஏற்கனவே கிரீன்லாந்தை அமெரிக்காவின் ஒருப்பகுதியாக சித்தரித்து வரும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் காரணமாக டென்மார்க் இடையே ராஜதந்திர பதற்றங்களை ஏற்படுத்தியிருந்தன.
கிரீன்லாந்து மக்கள் அமெரிக்காவின் அங்கமாக இருக்க எப்போதும் விரும்பவில்லை என்று டென்மார்க் பிரதமரும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் கிரீன்லாந்தில் 200 மில்லியன் யூரோ முதலீட்டை அறிவித்த சில மணி நேரங்களிலேயே ட்ரம்பின் இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |