ரைபிள் துப்பாக்கியுடன் புகைப்படம் வெளியிட்ட டிரம்ப்: ஈரானுக்கு விடுத்த மிரட்டல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையில் துப்பாக்கியுடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துப்பாக்கியுடன் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னுடைய கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இனி நான் நல்லவனாக இருக்க மாட்டேன் என ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரைபிள் துப்பாக்கியுடன் தன்னுடைய ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள டிரம்ப், “இனி நல்லவனாக இருக்க போவது இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.
#NEW: 🇺🇸 Trump stands armed in suit with rifle:#Trump #Iran #Geopolitics pic.twitter.com/moijdKGPJw
— Twilight (@TwilightDewy) April 29, 2026
மேலும் அவரது பதிவில் ஈரானால் இணைந்து செயல்பட முடியவில்லை. அவர்களுக்கு அணு ஆயுத ஒப்பந்தத்தில் எப்படி கையெழுத்து போடுவது என்று கூட தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
அவர்கள் புத்திசாலிதனமாக முடிவு எடுக்க வேண்டும், அணுசக்தி திட்டம் தொடர்பாக அவர்கள் விரைவான முடிவை எடுக்காவிட்டால் அமெரிக்க கடுமையான முடிவுகளை மேற்கொள்ளும் என்று எச்சரித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினை நேரில் சந்தித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆதரவை நாடிய நிலையில் டிரம்பின் இந்த மிரட்டல் வந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |