4 வயது சிறுவனை புகழ்ந்த டிரம்ப்: அவர் யார் தெரியுமா?
பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 4 வயது மகனை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் “உயர் IQ கொண்ட தனிநபர்” என்று புகழ்ந்துள்ளார்.
எலான் மஸ்க்கின் 4 வயது மகன்
எலான் மஸ்க் தனது மகன் எக்ஸ் ஏ இஸட் ஏ-XII(X Æ ‘X’ A-Xii) உடன் வெள்ளை மாளிகைக்குச் சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பிரபல தொழில்நுட்ப கோடீஸ்வரரான எலான் மஸ்க் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இணைந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தபோது, அவரது நான்கு வயது மகன் "எக்ஸ்" அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
BREAKING: Trump brings Elon Musk and his son into the Oval Office as he signs an executive order, singlehandedly humanizing children and promoting parenting in front of millions.
— Anna Lulis (@annamlulis) February 11, 2025
Normalize this.
Kids aren’t burdens—they’re the future.
pic.twitter.com/3m1HYaowER
இசைக்கலைஞர் கிரிம்ஸுடன்(Grimes) எலான் மஸ்க்கிற்கு பிறந்த மகன் எக்ஸ்(X), ஓவல் அலுவலகத்தை ஆராய்ந்து, தனது தந்தையைப் போல விளையாட்டாக நடித்துக் கொண்டு, மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்.
தற்போது வைரலாகி வரும் வீடியோவில், அவர் எலான் மஸ்கின் தோள்களில் அமர்ந்துகொண்டு, தனது தந்தையின் காதுகளில் விரல்களை குத்தும் காட்சி கூட பதிவாகியுள்ளது.
டிரம்ப் புகழாரம்
வெள்ளை மாளிகை வருகையின் போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பினால், எலான் மஸ்க்கின் மகன் “எக்ஸ்” ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.
மேலும், எக்ஸ் “சிறந்தவர்” என்றும் "உயர் ஐக்யூ கொண்ட தனிநபர்”(high IQ individual) என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புகழ்ந்ததை அவரது சிறப்பு உதவியாளரும், தகவல் தொடர்பு ஆலோசகருமான மார்கோ மார்ட்டின் ஆவணப்படுத்தினார்.
I'M SCREAMINGpic.twitter.com/Q77UDXrNFZ
— chris evans (@notcapnamerica) February 12, 2025
எலான் மஸ்க்கின் மகன் எக்ஸ்-யின் தோற்றத்திற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பல சமூக ஊடக பயனர்கள் அவரது வசீகரம் மற்றும் ஆர்வத்தைப் பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |