ரஷ்ய ஜனாதிபதி புடினை புகழ்ந்து தள்ளிய டிரம்ப்! என்ன சொல்லியிருக்கிறார்?
தான் ஆட்சியில் இருந்திருந்தால், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்பு ஒருபோதும் நடந்திருக்காது என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
The Clay Travis and Buck Sexton நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு மேதை மற்றும் வலிமையான, உறுதியான நபர் என்று புகழ்ந்தார்.
புடின் உக்ரைனின் பெரும்பகுதியை சுதந்திர நாடாக அறிவித்திருக்கிறார். அது எவ்வளவு புத்திசாலித்தனமான செயல்? இதான் மேதை.
எனக்கு புடினை நன்றாகத் தெரியும். நான் அவருடன் நன்றாகப் பழகியுள்ளேன். அவருக்கு மிகுந்த வசீகரமும், பெருமையும் உண்டு. அவர் தனது நாட்டை நேசிக்கிறார்.
உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கான ரஷ்யாவின் குறிக்கோள் குறித்து புடின் என்னிடம் பேசுவார். நானும் அவரிடம் இதைப் பற்றி பேசுவது வழக்கம்.
நீங்கள் இதை செய்யக்கூடாது, நீங்கள் செய்ய மாட்டீர்கள் என நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர் அவ்வாறு செய்ய விரும்புவது எனக்கு நன்றாக தெரிந்தது.
நான் ஆட்சியில் இருந்திருந்தால், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்பு ஒருபோதும் நடந்திருக்காது.
இந்த பிரச்சனை சரியாகக் கையாளப்பட்டிருந்தால், உக்ரைனில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை ஏற்பட்டிருக்காது என டிரம்ப் கூறினார்.
அதேசமயம், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விஷயத்தில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பைடன் பலவீனமானவர் என டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.