ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதி... அன்றே கணித்த பெண்மணி: அவர் குறித்து சொன்ன இன்னொரு தீர்க்கதரிசனம்
கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டு டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வருவார் என கணித்த ஜோதிடர் ஒருவர், ட்ரம்பின் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து அச்சமூட்டும் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பதவியேற்பு விழா
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வருவார் என அப்போதே கணித்தவர் Kelle Sutliff என்ற பெண் ஜோதிடர்.
ஆனால் தேர்தல் பரப்புரையின் போது இருமுறை படுகொலை முயற்சியில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ள டொனால்டு ட்ரம்ப் மீது மிக விரைவில் இன்னொரு தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என அதிர்ச்சியூட்டும் கணிப்பு ஒன்றை Kelle Sutliff மீண்டும் பதிவு செய்துள்ளார்.
டிசம்பர் 23ம் திகதி அவர் பதிவு செய்துள்ள காணொளி ஒன்றில் குறிப்பிட்டது போலவே, பதவியேற்பு விழாவானது அதன் பாரம்பரிய இடத்திலிருந்து அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பொதுவாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் படிக்கட்டில் வைத்தே விழாவானது முன்னெடுக்கப்படும். பிறக்கும் புத்தாண்டு தொடர்பில் தமது காணொளியில் விரிவாக அலசியிருந்த Kelle Sutliff, டொனால்டு ட்ரம்புக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட இருப்பதாக பதிவு செய்திருந்தார்.
மட்டுமின்றி, டொனால்டு ட்ரம்ப் மீது தாக்குதல் நடக்க வாய்ப்புள்ள திகதி தொடர்பிலும் Kelle Sutliff கணித்துள்ளார். ட்ரம்ப் பதவியேற்கும் ஜனவரி 20ம் திகதி திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அவர் தமது டிசம்பர் காணொளியில் பதிவு செய்திருந்தார்.
ட்ரூடோவின் வீழ்ச்சி
இதன் பொருட்டே பதவியேற்பு விழாவானது உள் அறைகளுக்கு மாற்றப்படலாம் என்றார். மேலும், இந்த காணொளியை ட்ரம்ப் பார்க்க நேரிட்டால், கண்டிப்பாக பாதுகாப்பை பலப்படுத்தவும் என Kelle Sutliff கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் மார்ச் மாதம் தொடங்கி மே வரையில் எச்சரிக்கை தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மே 8ம் திகதி மிக மிக கவனம் தேவை என்றும், ட்ரம்புக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் Kelle Sutliff பதிவு செய்துள்ளார்.
ட்ரம்ப் மட்டுமின்றி, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் வீழ்ச்சி தொடர்பிலும் Kelle Sutliff பதிவு செய்திருந்தார். மட்டுமின்றி, 2015ல் ட்ரம்ப் வெற்றி பெறுவார் என்பதையும் கணித்திருந்தார்.
மட்டுமின்றி, பாரிஸ் மற்றும் கலிபோர்னியாவில் பயங்கரவாத தாக்குதல்கள், பாஸ்டன் மராத்தான் குண்டுவெடிப்பு குறித்தும் தமது காணொளிகளில் இவர் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது..
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |