எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும்... நம்பிக்கை தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப்
ஈரானியத் தலைமை அமெரிக்காவுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள தீவிரம் காட்டுவதாகவும், போர் மிக விரைவில் முடிவுக்கு வரப்போகிறது எனவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வரப்போகிறது
உலகளாவிய எண்ணெய் விநியோகம் அதிகரித்து இருப்பதால், எண்ணெய் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அண்மைக் காலமாக உயர்ந்து வரும் எண்ணெய் விலைகள் வரும் காலத்தில் கடுமையாகச் சரியும் என்றும் கூறினார்.

ஈரானுடனான போர் மிக விரைவில் முடிவுக்கு வரப்போகிறது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைவதை நாம் எதிர்பார்க்கலாம் என்றார்.
மட்டுமின்றி, விநியோகத்திற்கு என பெருமளவில் எண்ணெய் தயார் நிலையில் இருப்பதாகவும், விலை வீழ்ச்சி உறுதி எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஈரானில் ஜனாதிபதி ட்ரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தக் கோரும் தீர்மானம் ஒன்றை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியுள்ளது.
பெரும்பாலான ஜனநாயகக் கட்சியினருடன் நான்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் இணைந்து இந்த நடவடிக்கைக்கு ஆதரவளித்த நிலையில், தீர்மானத்தை நிலைக்குழுவிலிருந்து விடுவிக்கும் தீர்மானத்தை செனட்டர்கள் 50-47 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஒப்புதல் அளித்தனர்.
இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக செனட் ஜனநாயகக் கட்சியினர் மேற்கொண்ட எட்டாவது முயற்சி இதுவாகும். கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வேண்டுகோள்களை ஏற்று, ஈரான் மீதான திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்.

தன்னிடம் கோரிக்கை
மேலும், தங்கள் நிபந்தனைக்கு உட்பட்டு ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் முன்னெடுக்கத் தவறினால், ஈரான் மீது முழுமையான, பெரிய அளவிலான தாக்குதலைத் தொடுக்கத் தயாராக உள்ளோம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிந்தார்.
ஈரானுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதால், ஈரான் மீதான திட்டமிடப்பட்ட அமெரிக்கத் தாக்குதலை ஒத்திவைக்குமாறு கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், ஈரானுக்கு எதிராக ஒரு பெரும் இராணுவ நடவடிக்கையைத் தனது நாடு திட்டமிட்டிருந்ததாகவும், இருப்பினும், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் மிக முக்கிய கட்டத்தில் இருப்பதாக நம்பிய மற்ற வளைகுடா நாடுகளின் தலையீட்டைத் தொடர்ந்து அந்தத் திட்டம் தாமதப்படுத்தப்பட்டதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |