டிரம்ப் முன்மொழிந்த 3 நாள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம்: புடினும்-ஜெலென்ஸ்கியும் சம்மதம்
உக்ரைன் ரஷ்யா இடையே 3 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம்
உக்ரைன் - ரஷ்யா இடையே 3 நாள் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவருடைய சமூக வலைதள பக்கமான ட்ரூத் சோஷியல் தளத்தில், இருதரப்பிற்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்று தொடங்கி திங்கட்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இருவருடனும் இது தொடர்பாக நேரடியாக பேசி இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தி இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் படி, இரு தரப்பினரும் 72 மணி நேரத்திற்கு போர் களத்தில் எந்தவொரு மோதலிலும் ஈடுபட கூடாது.
இரு நாடுகளும் பரஸ்பரம் 1000 பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதாகும்.
நேரடியாக என்னால் முன்வைக்கப்பட்ட இந்த போர் நிறுத்த கோரிக்கைகளை புடினும் ஜெலென்ஸ்கியும் ஏற்றுக் கொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |