மத்திய கிழக்கு நெருக்கடியில் திருப்புமுனை., ட்ரம்பின் 21 அம்ச அமைதி திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், மத்திய கிழக்கு பிரச்சினையில் முக்கிய முன்னேற்றம் ஏற்படவிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
"மத்திய கிழக்கில் சிறப்பான வாய்ப்பு உள்ளது. அனைவரும் ஒன்றிணைந்துள்ளனர். இது முதல் முறையாக நடைபெறுகிறது. நாங்கள் அதைச் செய்து முடிப்போம்" என ட்ரம்ப் தனது Truth Social தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஆசிய கிண்ணம் 2025 சாம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா., பாகிஸ்தானை அலறவிட்ட திலக் வர்மா, குலதீப் யாதவ்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளிக்கிழமை அமெரிக்கா வரவுள்ள நிலையில், ட்ரம்ப் முன்வைத்த 21 அம்ச அமைதி திட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த திட்டத்தில், நிரந்தர போர் நிறுத்தம், கைதிகள் விடுவிப்பு, இஸ்ரேலின் காசாவை விட்டு வெளியேறுதல் மற்றும் மனிதாபிமான உதவிகள் அதிகரிப்பு ஆகியவை அடங்கும்.
நெதன்யாகு, "நாங்கள் கைதிகளை விடுவிக்க விரும்புகிறோம்.ஹமாஸ் ஆட்சி முடிவடைய வேண்டும். காசா ஆயத்தமற்ற நிலையாக மாறவேண்டும். இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் புதிய எதிர்காலம் உருவாக்கவேண்டும்" என Fox News-ல் தெரிவித்தார்.
அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இந்த திட்டத்தை வரவேற்றாலும், இஸ்ரேல் படை நடவடிக்கைகள் உடனடியாக நிறைவடையவேண்டும் என்றும் காசா மீது ஆக்கிரமிப்பு தொடரக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் இந்த திட்டத்தை வரவேற்றாலும், இஸ்ரேல் படை நடவடிக்கைகள் உடனடியாக நிறைவடையவேண்டும் என்றும் காசா மீது ஆக்கிரமிப்பு தொடரக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளது.
திட்டத்தின் சர்ச்சைக்குரிய அம்சமாக, மேற்கு கரையிலுள்ள பாலஸ்தீன ஆட்சி அமைப்பின் பங்கு குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மீது சர்வதேச தனிமைப்படுத்தல் அதிகரிக்கிறது. பிரித்தானியா, பிரான்ஸ், கனடா மட்டும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. இது அமெரிக்காவின் பழைய நெறிமுறைகளுக்கு எதிராகும்.
இந்த அமைதி முயற்சி, மத்திய கிழக்கில் நீண்ட காலமாக நிலவிவரும் பதற்றங்களை முடிவுக்கு கொண்டு வருமெஎன எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Trump gaza peace plan, Trump gaza peace plan, Trump Middle Easr peace plan