ஷென்சென் உச்சிமாநாட்டில் அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து முடிவு: டிரம்ப், புடின், ஜின்பிங் கூட்டறிக்கை
Trump Putin Jinping issued a joint peace declaration: அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய 3 நாட்டு தலைவர்களும் ஷென்சென் உச்சி மாநாட்டில் அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்த கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அணு ஆயுதத்திற்கு எதிராக அமெரிக்கா, சீனா, ரஷ்யா கூட்டறிக்கை
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு(APEC) உச்சி மாநாடு சீனாவின் ஷென்சென் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய முக்கிய மூன்று தலைவர்களிடையே முத்தரப்பு பேச்சுவார்த்தையானது நடைபெற்றது.
இதில், அணு ஆயுதப் போரில் யாரும் வெற்றி பெற முடியாது. இத்தகைய போர் ஒரு போதும் நடத்தபடவும் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக 3 முக்கிய தலைவர்களும் இணைந்து கூட்டு அமைதி பிரகடனத்தை வெளியிட்டனர்.

அத்துடன் இந்த சந்திப்புக்கு பிறகு, அணு ஆயுத அபாயங்களை குறைப்பது தொடர்பாகவும், அணு ஆயுத பரவலை கட்டுப்படுத்துவதை நோக்கமாக கொண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட அமெரிக்கா, சீனா, மாஸ்கோ ஆகிய நாடுகள் உறுதி எடுத்துள்ளனர்.
ஆயுத கட்டுப்பாடு மட்டுமின்றி, சர்வதேச நீதித்துறை அமைப்புகளின் அதிகார வரம்பு குறித்தும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச நீதிமன்றங்கள் தங்களது அதிகார வரம்பை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் மூன்று தலைவர்களும் வலியுறுத்தினர்.