ட்ரம்பின் வர்த்தகப் போர்... பிரித்தானியாவுக்கு 24 பில்லியன் பவுண்டுகள் பொருளாதார இழப்பு
மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலிக்கும் நாடுகள் மீது தனித்தனியாக வரி விதிக்க இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், சுமார் 24 பில்லியன் பவுண்டுகள் இழப்பை பிரித்தானியா எதிர்கொள்ளும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சராசரியாக 20 சதவிகிதம்
அமெரிக்க பொருட்களுக்கு VAT எனப்படும் மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலிக்கும் நாடுகளுக்கு தனித்தனியாக வரி வசூலிக்க இருப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு பொதுவாக 21 சதவிகித வரி வசூலிக்கப்படும் என்றே தகவல் கசிந்துள்ளது. இது ஒவ்வொரு நாடுக்கும் தனித்தனியாக செயல்படுத்தப்பட இருப்பதால், பிரித்தானியாவுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாக தெரியவில்லை.
தற்போது பிரித்தானியா சராசரியாக 20 சதவிகிதம் மதிப்பு கூட்டப்பட்ட வரி வசூலித்து வருகிறது. ஆனால் ட்ரம்ப் தெரிவிக்கையில், VAT என்பதை தாம் வரி விதிப்பாகவே கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் வரி விதிப்புகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பிரித்தானிய பொருளாதாரத்தில் 0.4 சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்றும், அது 24 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் என்றும் நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
எந்த நாடும் புகார் தெரிவிக்காத வகையில், ஒவ்வொரு நாட்டுக்கும் உரிய வரியை அமுலுக்கு கொண்டுவர இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரிட்டிஷ் வர்த்தக சபையின் வர்த்தகக் கொள்கைத் தலைவர் William Bain தெரிவிக்கையில்,
மருந்து மற்றும் உணவு
இந்த ஆண்டு ஏற்கனவே கடினமான தொடக்கமாக மாறியிருப்பதால், ட்ரம்பின் இந்த முடிவு முதலீட்டாளர்கள், வணிகங்கள் மற்றும் நுகர்வோருக்கு அதிக செலவு மற்றும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என்றார்.
மட்டுமின்றி, ட்ரம்பின் இந்த நடவடிக்கைகளால் வாகனங்கள், மருந்து மற்றும் உணவு மற்றும் பானம் போன்ற துறைகள் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படலாம் என்று அவர் எச்சரித்தார்.
மேலும், அமைச்சர்கள் மாற்று ஏற்பாடுகள் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |