படகில் பயணித்த நபரை மொத்தமாக விழுங்கிய பெரிய திமிங்கலம்... அடுத்து நடந்த சம்பவம்
தெற்கு சிலியின் கடற்பகுதியில் பெரிய திமிங்கலம் ஒன்று துடுப்பிட்டபடி படகில் சென்ற நபரை வாயில் கவ்வி சிறிது நேரம் இழுத்துச் சென்ற சம்பவம் காணொளியில் பதிவாகியுள்ளது.
பெரிய திமிங்கலம் ஒன்று
ஆனால் சில நொடிகளில் படகுடன் அந்த நபரை காயப்படுத்தாமல் வெளியே துப்பியுள்ளது. அட்ரியன் சிமான்காஸ் என்பவர் கடந்த வார இறுதியில் தமது தந்தையுடன் படகு சவாரிக்கு சென்றுள்ளார்.
புன்தா அரினாஸ் நகருக்கு அருகே உள்ள கடலில் அவர் படகில் துடுப்பிட்டபடி பயணிக்க, திடீரென்று பெரிய திமிங்கலம் ஒன்று அவரை வட்டமிட்டுள்ளது. அத்துடன் சட்டென்று மேலெழும்பிய அந்த திமிங்கலம் வாயைப் பிளந்து படகுடன் அவரை விழுங்கியது.
அந்த நொடி தமக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றும், திடீரென்று தாம் அந்த திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கிக்கொண்டதை உணர்ந்ததாகவும் சிமான்காஸ் தெரிவித்துள்ளார்.
தப்ப வாய்ப்பே இல்லை
ஆனால் உடனடியாக அந்த திமிங்கலம் தம்மை வெளியே துப்பியதால் தப்பித்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, இன்னொரு படகில் பயணித்துக்கொண்டிருந்த அவரது தந்தை நடந்த சம்பவம் மொத்தம் தமது கமெராவில் பதிவு செய்துள்ளார்.
சுமார் 3 நொடிகள் அந்த திமிங்கலத்தின் வாய்க்குள் சிமான்காஸ் சிக்கியிருந்ததாகவும், அதன் பின்னர் அந்த திமிங்கலம் வெளியே துப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமிங்கலத்தின் வாயில் சிக்கியதும் தாம் உயிர் தப்ப வாய்ப்பே இல்லை என்று கருதியதாகவும், ஆனால் அதிர்ஷ்டவசமாக திமிங்கலம் உடனையே வெளியே துப்பிவிட்டதாகவும் சிமான்காஸ் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |