கனடா, மெக்சிகோவை அடுத்து இந்தியா மீதும் வரி விதிப்பு: உறுதி செய்த ட்ரம்ப்
இந்தியா மற்றும் பிற நாடுகளால் விதிக்கப்பட்ட மிகவும் நியாயமற்ற வரிகள் குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் விமர்சனத்தை மீண்டும் முன்வைத்துள்ளார்.
ஏப்ரல் 2 முதல்
இதன் அடிப்படையில் ஏப்ரல் 2ம் திகதி முதல் இந்தியா மீதும் 25 சதவிகித வரி அமுலுக்கு வருவதாக ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். பிற நாடுகள் பல தசாப்தங்களாக அமெரிக்காவுக்கு எதிராக வரிகளை விதித்து வருகின்றன, தற்போது அவர்களுக்கு எதிராக வரி விதிப்பது அமெரிக்காவின் முறை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சராசரியாக ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் மீது முதற்கட்டமாக வரி விதிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ள அவர், இதில் இந்தியா மீது ஏப்ரல் 2 முதல் வரி விதிப்பு அமுலில் வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா விதிக்கும்
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்தியா 100 சதவீதத்திற்கும் அதிகமாக வரி வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், இந்தியா மீது உரிய வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளதுடன், பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 2 முதல், மற்ற நாடுகளால் விதிக்கப்படும் வரிகளுக்கு இணையான வரிகளை அமெரிக்கா விதிக்கும் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மெக்சிகோ, சீனா மற்றும் கனடா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு அமுலில் வந்திருக்கும் நிலையிலேயே இந்தியா மீது வரி விதிக்க இருப்பதை ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்வதற்கு வசதியாக கனடாவின் பொருளாதாரத்தை முடக்குவதற்கு ட்ரம்ப் முயற்சிப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |