ஈரானை முடித்துவிட்டு... அமெரிக்காவின் அடுத்த இலக்கு அந்த நாடு: ட்ரம்ப் மிரட்டல்
ஈரானுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்ததும் அமெரிக்காவின் நடவடிக்கை கியூபா மீது திரும்பும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கியூபாவை அச்சுறுத்தி
வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் உரையாற்றுகையில், கியூபாவில் அற்புதமான பணியைச் செய்ததற்காக வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்தார்.

கியூபா பொருளாதாரத்தை நெருக்கும் வகையில், அந்த தீவு நாடு மீது ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை கடுமையாக்கியுள்ளது. தற்போது கியூபாவில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலை அற்புதமானது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஈரான் விவகாரத்தை முதலில் முடிக்க வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பும் அவரது ஆதரவு நாடுகளும் அடிக்கடி கியூபாவை அச்சுறுத்தி, அந்த நாட்டின் கம்யூனிச அரசாங்கத்தை கவிழ்க்கும் நோக்கத்துடன் பொருளாதார அழுத்தத்தை அதிகரித்து வருகின்றனர்.
ஜனவரி மாதம் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்து அமெரிக்காவிற்கு கடத்திய பிறகு, கியூபாவுக்கான வெனிசுலாவின் எண்ணெய் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்று ட்ரம்ப் கூறினார்.
பல ஆண்டுகளாக அமெரிக்காவின் கடுமையான தடைகளுக்கு உள்ளாகியுள்ள கியூபாவிற்கு ஒரு அத்தியாவசிய பொருளாதார உயிர்நாடியாக இருந்தது வெனிசுலாவின் எண்ணெய் விநியோகம்.
சர்வதேச சட்டத்தின் கீழ்
லத்தீன் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் தனது முன்னுரிமைகளை திணிப்பதற்காக ட்ரம்ப் இராணுவ நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வருகிறார். கியூபா விரைவில் வீழ்ச்சியடையத் தயாராக இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியிருந்தார்.
வெனிசுலாவில் டசின் கணக்கான மக்களைக் கொன்ற அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து போதைப்பொருள் கடத்தல் படகுகளுக்கு எதிராகப் பயன்படுத்திய தாக்குதல்கள் உள்ளிட்டவை சர்வதேச சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அத்தகைய கட்டுப்பாடுகளில் அதிக அக்கறை காட்டுவதில்லை. தமது முதல் ஆட்சியின் போது அமெரிக்க இராணுவத்தை கட்டமைத்ததாக கூறும் ட்ரம்ப், தாம் அதை தற்போது பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் அமெரிக்கா பலனடைந்துள்ளதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். வெனிசுலாவை அடுத்து தற்போது ஈரானில் அமெரிக்க இராணுவம் சிறப்பாக செயல்படுகிறது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அடுத்த இலக்கு கியூபா என்பது மட்டும் உறுதி என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |