நெதன்யாகுவிற்கு மன்னிப்பு: ஈரானின் 14 அம்ச திட்டத்தை நிராகரித்த டிரம்ப்
ஈரான் முன்வைத்த 14 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.
ஈரானின் 14 அம்ச அமைதி திட்டம்
அமெரிக்காவுடனான இராணுவ மோதலை முடிவு கொண்டு வரும் நோக்கில் ஈரான் அரசு 14 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
மத்தியஸ்தரான பாகிஸ்தான் மூலம் ஈரான் இந்த 14 அம்ச அமைதி திட்டத்தை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.

அதே நேரத்தில் இந்த அமைதி ஒப்பந்த திட்டத்தில் அணுசக்தி தொடர்பான எந்தவொரு அம்சங்களும் இடம்பெறவில்லை என்றும், முழுக்க முழுக்க போரை முடிவுக்கு கொண்டு வருவதை மட்டுமே நோக்கமாக கொண்டிருப்பதாகவும் ஈரானின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் எஸ்மாயில் பாகாயி ஞாயிற்றுக்கிழமை தஸ்னிம் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின் போது உறுதிபடுத்தியுள்ளார்.
அமைதி திட்டத்தை நிராகரித்த டிரம்ப்
இந்நிலையில் ஈரான் முன்மொழிந்துள்ள 14 அம்ச அமைதி ஒப்பந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலின் கான் நியூஸ் செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் டிரம்ப், ஈரானின் இந்த புதிய தூதரக முயற்சிகளை கடுமையாக விமர்சித்தும் உள்ளார்.

அதில், ஈரானின் 14 அம்சங்களை தான் தனிப்பட்ட முறையில் ஆராய்ந்ததாகவும், ஆனால் அவற்றில் திருப்திகரமான நிபந்தனைகள் எதுவும் இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீதான ஊழல் விசாரணைகள் குறித்து பேசிய டிரம்ப், நெதன்யாகு ஒரு போர் கால பிரதமர், நானும், நெதன்யாகுவும் இல்லாவிட்டால் இன்று இஸ்ரேல் இருந்திருக்காது. போர் சூழலில் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கை நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும். எனவே இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சோக்கி நெதன்யாகுவிற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |