ஆபாசப் பட நடிகை மற்றும் மொடலுடன் தொடர்பு: குடும்பத்தால் கைவிடப்படும் ட்ரம்ப்?
ஆபாசப் பட நடிகை ஒருவருடனும், பிளேபாய் மொடல் ஒருவருடனும் தவறான உறவு வைத்திருந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு பெண்களுடன் தொடர்பு
2006ஆம் ஆண்டு, ட்ரம்பும் தானும் தவறான உறவிலிருந்ததாக Karen McDougal என்னும் முன்னாள் பிளேபாய் மொடல் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் மனைவியான மெலானியா தனது இளைய மகனை பிரசவித்திருந்த நேரத்தில் இந்த உறவு நிகழ்ந்ததாக அவர் கூறியுள்ளார். 9 மாதங்கள் அந்த உறவு நீடித்ததாக Karen தெரிவித்துள்ளார்.
அதேபோல, Stormy Daniels என்னும் பெயரில் ஆபாசப்படங்களில் நடிக்கும் Stephanie Clifford என்ற பெண்ணும், தானும் ட்ரம்பும் 2006ஆம் ஆண்டு தவறான உறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மெலானியாவை ட்ரம்ப் திருமணம் செய்து நான்கு மாதங்களுக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை மூடி மறைப்பதற்காக தங்களுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டதாக அந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயங்கள் நடந்து பல ஆண்டுகள் அமைதிகாத்த இந்த பெண்கள், ட்ரம்ப் ஜனாதிபதியாவதற்காக பிரச்சாரங்களை துவங்கிய நேரத்தில் இந்த சம்பவங்கள் குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்கள்.
குடும்பத்தால் கைவிடப்படும் நிலையில் ட்ரம்ப்
தற்போது, இந்த குற்றச்சாட்டுகளுக்காக ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ட்ரம்பின் மனைவியாகிய மெலானியா, ட்ரம்பைப் பிரிய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், கணவனும் மனைவியும் தனித்தனியாக வாழ்ந்துவருவதாகவும், மெலானியா விரைவில் கணவரை விவாகரத்து செய்யக்கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேபோல, ட்ரம்பின் செல்ல மகளான இவாங்காவும், தந்தையிடமிருந்து விலகிச் செல்வதாக கூறப்படுகிறது.
ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் நின்றபோது, அவருக்காக பிரச்சாரம் செய்ததில் முக்கியப் பங்கு வகித்தார் இவாங்கா. அத்துடன், தந்தை ஜனாதிபதியானதும் அரசிலும் முக்கிய பங்கு வகித்தார் அவர்.
ஆனால், இம்முறை தான் தனது குடும்பத்தின் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் இவாங்கா.
நான் என் தந்தையையும் என் நாட்டையும் நேசிக்கிறேன், இன்று, என் தந்தைக்காகவும் என் நாட்டுக்காகவும் வேதனைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் அவர்.
Image: Getty Images